குட்டி

நடிகர்கள்: தனுஷ், ஸ்ரேயா 
தயாரிப்பாளர்: மித்ரன் ஜவஹர் 
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்



லைப் ஏ ஜாலிதான்
பாடகர்கள்: டி. எஸ்.பி. , ரெய்னா

If you keep smiling.. you'll be happy
if you don't smile... you'll get BP
Open Your heart and Look at this world 
லைப் ஏ ஜாலிதான் 
If you keep walking.. you'll be happy
if you keep worry.. you'll get BP
Open Your eyes and Look at this world 
லைப் ஏ ஜாலிதான் 


ஹே ஈஸ்ட்-டு வெஸ்ட்-டு நோர்த்-து சவுத்-து 
எங்கும் எங்கள் யூத்து கூத்து 
வாஸ்த்து பார்த்து வாழாதே லைப்-ஏ ஜாலிதான் 
ஹே ஹார்ட்-டு கோல்டு , ஸ்வீட்-டு சால்ட்-டு 
எதுவுன்னாலும் பாரு டேஸ்ட்-டு 
திட்டம் போட்டு வாழாதே லைப்-ஏ ஜாலிதான் 


ஹே எக்சாமினேசன் அடிக்கடி டியுசன் 
இல்லாம போனால் ஜாலிதான் 
திட்டாத டாடி தித்திக்கும் ஜோடி இருந்தா ஜாலிதான் 
ஹே கைகளை ரெக்கையா மாத்து ஜாலிதான் 
குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான் 
அட ஜாலிதான் 
குடை இருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான் 
அடிக்கடி மனச திறந்தா ஜாலிதான் 
அட ஜாலிதான் 
மனசுக்கு புடிச்சத ரசிச்சா ஜாலிதான் 


If You keep smiling.. you'll be happy
if you don't smile.. you'll get BP

Open your heart and Look at this World லைப் ஏ ஜாலிதான் 
அரும்பாக மீசை வரும்போது 
விரலாலே மெல்ல தொடும்போது 
மனதோடு தோன்றும் சந்தோசம் ஜாலிதான் 
மிளகாயப்போல பேசாம 
மெதுவாக அன்பா நீ பேசு 
கொலைகாரன்கூட கொழந்தைதான் ஜாலிதான் 
கராத்தே குங்-பு தெரிகிறபோதும் 
நண்பனிடம் தோத்தா ஜாலிதான் 
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான் 


ஹே.. தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான் 
எமனிடம் ஜோக்கு அடித்தால் ஜாலிதான் 
அட ஜாலிதான் 
எரிமலையில் குளிர் காய்ந்தால் ஜாலிதான் 
ஹே இளமையை முழுசாய் ரசிச்சா ஜாலிதான் 
அட ஜாலிதான் 
முதுமையை மனசில் மதிச்சா ஜாலிதான் 


ஹே ஈஸ்ட்-டு வெஸ்ட்-டு நோர்த்-து சவுத்-து 
எங்கும் எங்கள் யூத்து கூத்து 
வாஸ்த்து பார்த்து வாழாதே லைப்-ஏ ஜாலிதான் 


பல நூறு ஆண்டு முன்னால 
உன் வீடும் தெருவும் உனதில்ல 
புரிந்தாலே வாழ்க்கை எப்போதும் ஜாலிதான் 
பல நூறு பேரை வென்றாலும் 
அது வீரம் என்று ஆகாது 
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான் 
பொறாமை கோபம் இல்லாம வாழ 
உன்னால முடிஞ்சா ஜாலிடா
எல்லோரும் போல வாழாம புதுசா இருந்தா ஜாலிதான் 


ஹே... லட்சியம் ஆகிற கனவு ஜாலிதான் 
ஜெயிக்கிறபோது அழுகை ஜாலிதான் 
அட ஜாலிதான் 
தோல்வியை கண்டு சிரிச்சா ஜாலிதான் 
டா டா டா 
அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான் 
அட ஜாலிதான் 
அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான் 


If you keep smiling.. You'll be happy
If you don't smile.. you'll get BP
Open Your heart and Look at this world.... 
லைப் ஏ ஜாலிதான் 
________________________________________________________

யாரோ என் நெஞ்சை 
பாடகர்கள் : சாகர், சுமங்கலி

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே 
தூங்கும் என் உயிரை தூண்டியது 
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே 
வாசம் வரும் பூக்கள் வீசியது 
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் 
மேகங்கள் இல்லாமல் மழைச்சாரல் ஆரம்பம் 
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே


நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னைக்கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே


ஹோ........ பேசச்சொல்கிறேன் உன்னை 
நீ ஏசிச்செல்கிறாய் என்னை 
வீணை தன்னையே மீட்டிக்கொண்டாதாய் 
எண்ணிக்கொள்கிறேன் அன்பே 
காலம் என்பது மாறும் 
வலிதந்த காயங்கள் ஆறும் 
மேற்கு சூரியன் மீண்டும் காலையில் 
கிழக்கில் தோன்றி தான் தீரும் 
நதியோடு போகின்ற படகென்றால் ஆடாத 
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா 
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா


நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னைக்கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே


ஹோ........ பாதி கண்களால் தூங்கி 
என் மீதிக் கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு சேர்க்கின்றேன் தாங்கி 
நேசம் என்பது போதை 
ஒரு தூக்கம் போக்கிடும் பாதை என்றபோதிலும் 
அந்த துன்பத்தை ஏற்றுக்கொள்பவன் மேதை 
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா 
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா 
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா!


நிலவாக உன்னை வானில் பார்த்தேன் 
அலையாக உன்னைக்கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன் 
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் 
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே!
____________________________________________________________


நீ காதலிக்கும் பொண்ணு 
பாடகர்: முகேஷ் 

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேனா 
கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே
வெய்யில் சுட்டெரிக்கும் போதும் 
மழை கொட்டி தீர்க்கும் போதும் 
தள்ளி நிற்காதே அவள தள்ளி நிற்காதே!
லெட்'ஸ் கோ....

ஹே.! நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேனா 
கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே
வெய்யில் சுட்டெரிக்கும் போதும் 
மழை கொட்டி தீர்க்கும் போதும் 
தள்ளி நிற்காதே அவள தள்ளி நிற்காதே!

அவ பார்க்கலன்னு விட்டு விடாதே 
உள்ளிருக்கும் காதல்தான் வெட்டி விடாதே!
அட முள்ளில்லா ரோஜாதான் இங்கு இல்லையே 
குத்திபுட்டா கை எடுக்காதே !
அவ கொத்துனாலும் கோப படாதே!

ஹே.. லவ் லவ் லவ் 
போட்டி இல்லா லவ் 
வேஷம் போட தேவையில்லை வன் சைட் லவ்!

ஹே.. லவ் லவ் லவ் 
வார்த்தை இல்லா லவ் 
கனவுலையே வாழ்க்கை போகும் வன் சைட் லவ்!

ஹே.! நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேனா 
கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே
வெய்யில் சுட்டெரிக்கும் போதும் 
மழை கொட்டி தீர்க்கும் போதும் 
தள்ளி நிற்காதே அவள தள்ளி நிற்காதே!

என்ன ஒகே-வா?

ஹே.. கையதொட்டா முத்தமிட்டா 
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே!
அவ மேல பட்ட ஹ -காத்துக்காக 
அட ஏங்குண்டா வன் சைட்-டு காதலே!
ஹே.. பத்து நாளு காத்திருப்போமே 
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிற்போமே!
அவ திட்டினாலும் துப்புனாலும் கவலை இல்லையே 
உள்ளங்கையில் வச்சிருப்போமே 
அவள நெஞ்சுக்குளே தச்சிருப்போமே!

ஹே! லவ் லவ் லவ் 
காத்திருக்கும் லவ் 
கத்தியில கைய கீறும் வன் சைட் லவ்!

ஹே! லவ் லவ் லவ் 
தண்ணிபோடும் லவ் 
மானமில்ல ரோஷமில்ல வன் சைட் லவ்!

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேனா 
கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே!

- தோண்ட தோண்ட ஆழம் போக 
தண்ணியோட டேஸ்ட்-டு ரொம்ப யாஸ்த்திடா !
ஹே.. ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி 
வந்தகாதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா!
கமல் அடுத்து சூரியில்லடா 
நம்ம கிட்ட கட்டு கட்டா நோட்டும் இல்லடா!
வெறும் மனசமட்டும் பார்த்து காதலிக்கதான் 
கொஞ்சம் நீயும் டைம்மு கொடேண்டா !
அதுல வந்த காதல் வேற சுகண்டா!

ஹே.. லவ் லவ் லவ் 
டெலிபோன் பூத் லவ் 
அவ குரல மட்டும் கேட்டு வைக்கும் வன் சைட் லவ்!

ஹே.. லவ் லவ் லவ் 
புனிதமான லவ் 
எந்த ஆம்பளைக்கும் முதல்ல வர்ற வன் சைட் லவ்!
_________________________________________________________________


FEEL MY LOVE
பாடகர்:கே கே

Feel my love
என் காதல் சரியோ தவறோ 
என் காதல் முள்ளோ மலரோ 
என் காதல் முதலோ முடிவோ 
சகியே Feel my love.

என் காதல் வெயிலோ நிழலோ 
என் காதல் இனிப்போ கசப்போ 
என் காதல் நிறையோ குறையோ 
சகியே Feel my love.

என் காதல் சிலையோ கல்லோ 
என் காதல் சிறகோ சருகோ 
என் காதல் வலியோ சுகமோ 
வெறுத்தோ..பிடித்தோ..
அடித்தோ.. அணைத்தோ..
Feel My love..
Feel My love..

Feel My love.. feel my love
Feel My love... feel my love

என் காதல் சரியோ தவறோ 
என் காதல் முள்ளோ மலரோ 
என் காதல் சரியோ தவறோ 
என் காதல் முள்ளோ மலரோ 
என் காதல் முதலோ முடிவோ 
சகியே Feel my love.

நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும் போது feel my love
என் வீதி தெரியும் ஜன்னல் மூடும் போது feel my love
என் செய்கையெல்லாம் வெறுக்கும் போதும் feel my love
சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே 
என் காதல் வெற்றி பெற்ற சந்தோசம் கொள்ளுமே 
மேகத்தில் போகும் போது காலைத்தட்டும் கல்லாய் கூட 
Feel My love... feel my love.. feel my love
Feel My love... feel my love.. feel my love

என் காதல் சரியோ தவறோ 
என் காதல் முள்ளோ மலரோ 
என் காதல் முதலோ முடிவோ 
சகியே Feel my love.

கை விசிறி போலே உன் கை தீண்டும் வரம் வேண்டாம் 
மின் விசிறியாக வாழ்வேன் அழகே feel my love
பன்னிரண்டு மணி முல்லை போல சேர ஆசை இல்லை 
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே feel my love
யார் தன்னை பார்க்க வேண்டும் 
விண்மீன் தான் சொல்லுமா 
யாரேனும் தீண்ட வந்தால் 
ரோஜா பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய 
தேவை இல்லை உன் அனுமதியே 
Feel My love..
Feel My love..

என் காதல் சரியோ தவறோ .. 
என் காதல் சரியோ தவறோ 
என் காதல் முள்ளோ மலரோ .. 
என் காதல் முள்ளோ மலரோ 
என் காதல் சரியோ தவறோ 
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ 
சகியே feel my love.... 
____________________________________________________________

கண்ணு ரெண்டும் 
பாடகர்கள்: முகேஷ், ப்ரியாஹிமேஷ்

ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் 
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும் 
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும் 

ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் 

கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும் 
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குதான்

என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குதான் 
உள்ளங்கையின் ரேகையெல்லாம் சொர்க்கதோட மேப்புதான் 
பின்னிடாத கூந்தல் ஒரு கன்னங்கரு குற்றாலந்தான் 
டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா 
ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா
நான் வெட்டி வச்ச கொய்யா 
ஹே ..டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா
பைய பைய பையா என்னை தின்னுப்புட்டு போய்யா

ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் 

கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும் 
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம் 

ஊரே வந்து என்னை பார்துப்போகுது 
ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம் 
மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது 

ஏய் கேக்குரவ கேனைதான்னா

கெணத்துக்குள்ள திமிங்கலம்ப
ஹே மாரியம்மன் கோயிலுக்கு பூசாரி டேவிட்ம்ப 

ஆளு கலக்குரானே தேளா கடிக்குரானே 

ஆள அசத்துரானே ஆத்தி 
டீய டீய டீயா ...
டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா 
ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா
நான் வெட்டி வச்ச கொய்யா 
ஹே ..டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா 
பைய பைய பையா என்னை தின்னுப்புட்டு போய்யா

ஹே பட்டு சேல கட்ட சொல்லித்தான் 

என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது 
ஹா கோட்டன் சேலை கட்டசொல்லிதான் 
பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது 

ஏ பருத்தியோ பட்டு சேலையோ 

கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது 
கைக்குட்டைய பாதி கிழிச்சு ஆடை தைக்கிற காலந்தான் இது

ஊமைக்குசும்புக்காரா ஒல்லி ஒடம்புக்காரா 

தள்ளி நடக்க வேணாம் வாடா
டீய டீய டீயா ...
டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா 
ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா
நான் வெட்டி வச்ச கொய்யா 
ஹே ..டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா 
பைய பைய பையா என்னை தின்னுப்புட்டு போய்யா

ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் 

கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும் 
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்


No comments:

Post a Comment